திருச்சி மக்களவை தொகுதி்யில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் மற்’றும் தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் ஜமால் முகமது கல்லூரியில்உ ள்ள ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூத் வாரியாக வரிசையாக அடுக்கி சரிபார்க்கப்பட்ட பின் அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது: திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள 1665 பூத்களிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 67.42% வாக்குகள் பதிவானது. இந்த எந்திரங்களை கண்காணிக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 200% பாதுகாப்புடன் இந்த ஸ்ட்ராங் ரூம் இருக்கும் 24 மணி நேரமும் கண்காணிப்பு இருக்கும்.
வாக்கு எண்ணப்படும் நாள் வரை தினமும் நானும் வந்து ஆய்வு செய்வேன். கண்காணிப்பு காமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நம்முடைய அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.