பிரதமர் மோடி நாளை காலை ஸ்ரீரங்கம் வருகிறார். அவர் அரங்கநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். காலை 10.15 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பிரதமர் 11.45 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கிறார். அவரது வருகையொட்டி திருச்சி மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விமானநிலையம் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடக்கரை மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர்கோவிலையொட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20-ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்கிற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார் என திருச்சி பிஆர்ஓ அலுவலகம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் மாவட்டக்கலெக்டருக்கு அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில் பாரத பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நலன்கருதி ஸ்ரீரங்கம் கோவிலில் 19ம் தேதி மாலை 6 மணி முதல் 20ம் தேதி மதியம் 2.30 மணிவரை பொது தரிசனம் இல்லை என்கிற விபரம் அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது எனவும் அதில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போலவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் இணை ஆணையரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட “பாரத பிரதமர்” என்கிற வார்த்தையை திருச்சி பிஆர்ஓ அலுவலகமும் கலெக்டர் அலுவலக பத்திரிக்கை குறிப்பிலும் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.. இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றம் செய்யப்படவுள்ளதான சர்ச்சை தொடரும் நிலையில் இந்த பத்திரிக்கை செய்தி பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..
“பாரத பிரதமர்”.. திருச்சி பிஆர்ஓ அலுவலகம் பத்திரிக்கை செய்தி…
- by Authour