திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் 02.01.2023 (திங்கள் ) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் … திருச்சியிலுள்ள தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.01.2023 சனிக்கிழமை அன்று வேலை நாள் ஆகும்.