திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. பள்ளி கட்டணம் கட்டியதற்கு ரசீது தராமல் ஏமாற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் . அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மன்னார்குடி நெடுவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகள் திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் எனது மகள் பள்ளி கட்டணத்திற்காக மூன்று தவணையாக ரூபாய் 95 ஆயிரம் செலுத்தினேன். செலுத்திய தொகைக்கு பள்ளி நிர்வாகத்திடம் ரசீது கேட்டேன் ரசீது தரவில்லை. மேலும் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது பருவ விடுதி கட்டணமாக ரூபாய் 35 ஆயிரம் பணத்தை செலுத்தினேன். அப்போதும் பணம் கட்டியதற்கான ரசீது கேட்டேன் பள்ளி நிர்வாகம் தரவில்லை.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எனது மகளிடம் விடுதி கட்டணம் ரூபாய் 35 ஆயிரத்தை மீண்டும் கட்ட சொல்லி வற்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்ததால். பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விடுதி கட்டணம் செலுத்தியது பற்றி பலமுறை எடுத்துக் கூறியும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை. மேலும் எனது மகளிடம் தொடர்ந்து விடுதி கட்டணம் கட்ட சொல்லி மனரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை அதனால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று கமலா நிகேதன் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தார்.