தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று அய்யாக்கண்ணு மாநிலத்தலைவர் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் வங்கிக்கு போகாமல் ரூ.160 கோடிகள் விவசாயிகள் பெயரில் பெற்று ஏமாற்றியதை கண்டித்தும், கரும்பு ஆலை முதலாளிகளையும், வங்கி மேலாளர்களையும் கைது செய்ய வேண்டும். கடந்த ஆண்டு அதிக மழையால் அழிந்து பயிர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உதவ வேண்டும். 60
வயதடைந்த விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் மகன் மருமகளிடமிருந்து காப்பாற்ற மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகளே நேரிடையாக விவசாயிகளிடம் காப்பீடு தொகை பெற்று வறட்சி வௌ்ள சேத காலங்களில் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டுகிறோம். தனி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திருச்சி கலெக்டரிடம் மனுவாக அளித்தனர். இதனா்ல அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.