திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரூபன் மார்ட்டின் (வயது 40) இவர் தேங்காய் வியாபாரி. சம்பவத்தன்று இவர் எஸ்.ஐ.டி.பஸ் நிறுத்தம் அருகில் சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் வந்த அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த யுவராஜ் (வயது 24) தீபக் (வயது 17 ஆகிய இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூபன் மார்ட்டின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டனர்.இதுகுறித்து ரூபன் மார்ட்டின் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ்,தீபக் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது,இருவரும் ரவுடிகள் என்பதும் தெரிய வந்தது. இதை யடுத்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் தீபக் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.