திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் ,துர்கா தேவி, கவுன்சிலர்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“மக்களுடன் முதல்வர்“’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று, மாமன்ற உறுப்பினர்களுடன் முகாமை கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் என்ற மேயர் அன்பழகன் தெரிவித்தார்.