திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் போலீஸ் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கண்ணாடிகளை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள் போலீஸ் வேனின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
