திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் பகுதியில் இன்று மதியம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வந்த சென்னை பதிவெண் கொண்ட பென்ஸ் கார் சிக்னலை வேகமாக கடக்க முயன்றது. அதற்குள்ளாக ரெட் சிக்னல் விழுந்ததால் காரின் வேகத்தை குறைக்க முடியாமல் டிரைவர் சீனிவாசன் முன்புறம் திடீரென நின்ற ஆட்டோ மற்றும் டூவீலரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் பென்ஸ் காரின் முன்புறம் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஆரோக்கியராஜ், டூவீலரில் நின்று கொண்டிருந்த ரோகன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பென்ஸ்கார் இன்று மாலை திருச்சி விமான நிலையத்திற்கு வரவிருந்த முதல்வர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை அழைப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொ்டர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.