திருச்சி மாநகரம் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். நேற்றிரவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் காமினி உத்தரவிட்டார். புகார் மனுக்கள் விவகாரங்களில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் அலட்சியமாக இருந்ததாக கமிஷனரிடம் அளிக்க்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.