விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் டிவிட்டர் மூலம் பிளாக்கில் விற்கப்படுவதாகவும், சில தனியார் விஜபிகளின் பெயர்களை கூறி டிக்கெட்டுகளை அநியாய விலைக்கு விற்பதாகவும் இன்று காலை etamil news -ல் ” லியோ” விற்கு டிவிட்டரில் பிளாக் டிக்கெட் .. திருச்சி போலீஸ் கவனிக்குமா?.. என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் நாளை லியோ வெளியாகும் காவேரி சினிமா தியேட்டர் முன்பாக பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்து வந்த திருச்சி கல்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்த கதிரவன்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர். etamilnews.com செய்திக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்த திருச்சி மாநகர போலீசாருக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்…