திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா (45). விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு சுவர் ஏறி குதித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை வைத்து கழுத்தை அமுக்கி மிரட்டினர். அவர் கழுத்தில் போட்டு இருந்த 5 பவுன் தங்கச் செயினை கத்தியை வைத்து பறித்து சென்றனர் .
அப்பொழுது அவர் கன்னத்தில் சிறு காயம் ஏற்பட்டது. உடனே மீண்டும் சுவர் ஏறி குதித்து இரண்டு பேரும் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரும் தலைக்குள்ளா போல் போட்டு முகமூடி அணிந்து வந்ததாகவும் கையில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் குறிப்பிட்டார் . அவர் வசித்து வரும் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சுமார் ஆறடி உயரத்திற்கு மேல் இருக்கும் திட்டமிட்டு பக்கத்து வீட்டு பகுதியில் இருந்து இரண்டு பேரும் பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்து விதவை பெண்மணியிடம் தங்கச் செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.