திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை 19.01.2023ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ. யு. டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், எம். கே. பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழ கொண்டையம்பேட்டை, நடு கொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பென்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.