ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு..
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் வீட்டுக்கு திரும்ப முற்படும்போது டூவீலரில் வந்த மர்மநபர் உஷாவின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து உஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
மாநகராட்சி ஊழியரிடம் தகராறு
திருச்சி தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். (50 ).திருச்சி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவர் தென்னூர் மீனாட்சி தோப்பு தெரு பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் இவரிடம் தகராறு செய்ததுடன் பைப் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். இது குறித்து பன்னீர்செல்வம் தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திவ்ய பிரியா 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி தற்கொலை
ஸ்ரீரங்கம் வேலூர் ரோடு நெடுந்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். ( 63) ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் தீராத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இவரது மனைவிக்கு கேன்சர் இருந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் விக்கிரமாதித்தன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் திலீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் எஸ்.ஐ தீபிகா சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தாய் திட்டியதால் மகன் தற்கொலை
திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ படையாச்சி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் .
இதற்காக குடி போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் மீண்டும் வினோத் குடிக்க ஆரம்பித்துவிட்டார். இதை அவரது தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வினோத் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து பாலக்கரை போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
பிணமாகக் கிடந்த முதியவர்
திருச்சி தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (64 )இவர் குடும்பத்தை பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் வசித்து வந்த வீட்டிற்குள்ளே இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். குடிப்பழக்கம் உடையவர் .இது குறித்து அவரது உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.