Skip to content
Home » திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள் ..

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள் ..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் கைதி

தற்கொலை முயற்சி

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31) இவர் திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்த நிலையில் கடந்த 29ந்தேதி முகமது உசேன் தன்னை பொதுவார்டுக்கு மாற்ற கோரி ஜெயில் வார்டன் பணியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் முகமது உசேன் பேண்ட் நாடாவை கழற்றி அதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை வாடன் அவரை உடனடியாக மீட்டனர்.இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் ஆயுள் தண்டனை கைது முகமது உசேன் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பாஸ்போட்

நாகை நபர் கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிக்ரேசன் அதிகாரி சோதனை நடத்தினார். அப்பொழுது நாகை மாவட்டத்தை சேர்ந்த முகமது ராவுப் என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அந்த பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி வருடம் மாற்றப்பட்டு போலி பாஸ்போர்ட்டில் அவர் வந்தது தெரிய வந்தது இதை எடுத்து இமிக்ரேசன் அதிகாரி லோகநாதன் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ராவுப் கைது செய்துள்ளனர்.

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தினார்கள்.போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.