Skip to content
Home » டைலரை கத்தியால் குத்திய ரவுடி.. திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

டைலரை கத்தியால் குத்திய ரவுடி.. திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..


திருச்சி துவரங்குறிச்சி காமன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (43) கடந்த 3 மாதங்களாக திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9வது கிராஸ் பகுதியில் உள்ள தனது சகோதரி மஞ்சுளா வீட்டில் தங்கி அருகிலுள்ள ஒரு கடையில் டைலர் வேலை பார்த்து வந்தார். இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார்.  அப்போது 4 மர்ம நபர்கள் அவரது சகோதரி வீட்டின் இரும்பு கேட் மீது ஏறி குதிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த கும்பலை தட்டி கேட்டார். இதையடுத்து கோபாலுக்கும் அந்த 4 பேர் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த
அந்த நபர்கள் அவரை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.இதில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபாலை கத்தியால் குத்திய நபர்கள் திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் என்கிற முத்தமிழ் குமரன் (35) அவரது நண்பர்கள் சிவா, சூர்யா,அன்பு என்பது தெரியவந்தது. பின்னர் குமரனை கைது செய்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை

ஒருவர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாநகர மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில் பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா விற்ற ஒருவரை மடக்கி கைது செய்தனர். கைதானவர் ராம்ஜி நகர் காந்திநகர் பகுதி சேர்ந்த மாயகிருஷ்ணன் (39) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் டூவீலரை மது விலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரை

2 பேர் கைது

 

திருச்சி கே.கே. நகர் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் போதை மாத்திரை விற்பதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடமடைந்தனர். பின்னர் அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் பாபு (25)என்ற வாலிபர் தீமை விளைவிக்க கூடிய 300 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நிவாஸ் பாபுவை கைது செய்து அவரிடமும் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய
காட்டூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ( 25) அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கவி (25) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!