திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 26.09.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன்கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரிய சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னர்ஸ் சாலை, அண்ணாநகர், குத்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
