தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மாறன், பொருளாளர் டோம்னிக், பொறுப்பாளர் ராஜு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தினக்கூலி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ 754 மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ 793 வழங்க வேண்டும். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை என்ற 8 மணி நேர வேலை சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநருக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை சாக்கடை, வாய்க்கால் மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறக்காமல் நவீன இயந்திரங்கள் உதவியுடன் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பிரியா, சின்னப்பொண்ணு, ராமசாமி உட்பட 150க்கு மேற்பட்டோர் கலந்து .