திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து வருகின்றனர், 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மா மண்டபத்திற்கு வரும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.
அதேநேரம் பெற்ற குழந்தைகளை பிச்சை எடுக்க 500 ரூபாய்க்கு வாடகைக்கு குழந்தைகளை பெற்று வந்து அம்மா மண்டபத்தில் பிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தெரிந்தும் மாவட்ட
நிர்வாகமோ, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை அதேநேரம் சைல்ட் லைன் அமைப்புக்கு புகார் தெரிவித்தும் எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் சைல்ட் லைன் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.