திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில் பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அதிர்ச்சியான போலீசார் குழந்தையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை வார்டில் அனுமதித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் அருகில் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி ( 19) என்ற கல்லூரி மாணவி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரும் திருச்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தெடார்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவி கலைவாணியின் குழந்தை என்பது தெரியவந்தது. மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்தது . ஆபத்தான நிலையில் கல்லூரிமாணவி கலைவாணி திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலைவாணி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக மாசிஸ்திரேட்டிடம் கலைவாணி மரண வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்கு மூலத்தில் தன்னை விஷம் ஊற்றி கொன்றதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது . இதில் கலைவாணி 2 பேர் மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்பு மேலும் பல உண்மைச் சம்பவங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.