திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக தொழில்நுட்பவியல் நிறுவனம் உள்ளது.
இங்கு உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மை சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
உணவக மேலாண்மை மற்றும் உணவு தயாரிப்பு படிப்புகள், மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள், தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள், விருந்தோம்பல், சுற்றுலா குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஸ்ட் கிளப் கல்லூரி வளாகத்தில் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் பெனுகுண்டா தலைமை வகித்தார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பொன்னிளங்கோ முன்னிலை வகித்தார். பிரபல சமையல் கலை வல்லுநர் செஃப் தாமு மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன் கலந்து கொண்டு
போஸ்ட் கிளப்பை துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விழாவில் மாணவர்களிடையே செஃப் தாமு பேசுகையில்,
நான் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். ஆங்கிலம் பேசுபவர்களை கண்டால் பயமாக இருக்கும். பிறகு தன்னம்பிக்கையுடன் படித்தேன். சரியோ தவறோ தயக்கங்களையும் தாழ்வு மனப்பான்மை தூக்கி எறிந்து விட்டு ஆங்கிலம் பேசுங்கள். மாணவர்கள் லட்சியத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்காக கடின உழைப்பு செலுத்தினால் நிச்சயம் லட்சியத்தை அடைய முடியும். நேர்மையான எண்ணம், நேர்மையான பாதை மற்றும் நற்சிந்தனை யுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்றார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
