திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்கில் ஈடுபட்ட கைதிகள், மற்றும் இலங்கை தமிழர்கள் 100க்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். இம் முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இந்த சோதனை தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீதேவி மற்றும் கே.கே.நகர் காவல் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு முகாமில் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனை ஈடுபட்டனர் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் 5செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக செல்போன்கள், லேப்டாப்புகள் பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இன்றும் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.