திருச்சி, கருமண்டபம், ஆர் எம் எஸ் காலனி 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (38) இவர் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டு ஆக பணிபுரிந்து வருகிறார். செந்தில்குமார்
பூலாங்குளத்துப்பட்டியில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் முத்துலட்சுமி வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடி சென்று விட்டனர். பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த முத்துலட்சுமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தார். இந்த சம்பவம் குறித்து முத்துலட்சுமி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் ஏட்டு முத்துலட்சுமி வீட்டில் நகையை திருடிய மர்ம நபர்களை
வலைவிசி தேடி வருகின்றனர்.
