புனித் சாகர் அபியான் என்ற மாசு கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் காவிரி ஆற்று படித்துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ அதிகாரிகள் சுபேதார் தானாஜி போபன், சுபேதார் சதாசிவன் மற்றும் ஹவில்தார் சுரேஷ் ஆகியோர் தலைமையில் அங்கு கிடந்த குப்பைகளை அகற்றியும், படித்துறைகளை சுத்தப்படுத்தியும் அங்கிருந்த பொதுமக்களி டையே
விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து என்.சி.சி. மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பொது சுகாதாரம், நீர்நிலைகளை பாது காப்பதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.