திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு உதவிடும் வகையில் நிரந்தர குரம்பு அமைக்க வேண்டும் பாசன வாய்க்கால்களின் தலைப்பு தற்போது ஸ்ரீ ராம சமுத்திரத்தில் உள்ளது அந்த தலைப்பை மாற்றி மாயனூர் கதவனை அருகே அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் காப்பீட்டு திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 200 விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் முசிறி கைகாட்டியில் திருச்சி நாமக்கல் சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து பேரணியாக முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லா பகுதியில் இறங்கிபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யாக்கண்ணு கூறும் போது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை முசிறி காவிரி ஆற்றில் இரவு பகலாக தங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் காவிரி ஆற்றில் தினசரி ஒரு விவசாயி விதம் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தார் விவசாயிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் முசிறி தாசில்தார் சண்முகப்பிரியா ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகளின் திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.