திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் நமது முன்னோர்களை வழிபட்டு ஊர் செழிக்கவும் விவசாயம் வளம் பெறவும் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நமது முன்னோர்களை வழிபட்டு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் பொருட்டு வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மூன்று
சிறுமிகளுக்கு சாமி அழைத்து அம்மாயி தாத்தா மற்றும் மாரியம்மனை ஆகிய தெய்வங்களை அழைத்து அவர்களிடம் வாக்கு கேட்டு ஊர் விவசாயம் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வர வேண்டி பின்பு அம்மாயி சாமியை அழைத்து அம்மாயி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்தி பெண்கள் கும்மி அடித்தும் குலவை போட்டும் அம்மாயியை வழிபட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.