திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிச்சை, கலைச்செல்வன், அண்ணாதுரை ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனை கண்ட போலீசார் உடனடியாக சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் 350 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
