திருச்சி கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் 2023 மாபெரும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இக்கண்காட்சியில் வைக்கப்ட்டுள்ள விவசாய எந்திரங்களை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாரம்பரிய நெல்வகைகளையும், விவசாய எந்திரங்களையும், புவிசார் பொருட்களையும் , சிறுதானியங்களால் செய்யப்பட்ட மாதிரி சிலைகளையும், மணமணக்கும் மசாலா வகைகளையும், பலவித உணவு வகைகள், உடனடி உணவுகள்
உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். தானியங்களால் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.