திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு வயது குழந்தை,சிறுமிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
திருச்சி பொன்மலை அடைக்கலம் அன்னை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் 33 வயதான சுரேந்தர் பாபு.இவர் காரில் பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்த காரில் 29 வயதான இந்துமதி 50 வயதான சுகுணா, ஒரு வயதான மகிஷா உள்ளிட்டோர் இருந்தனர். அதேபோல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா அரியூர் மேல கவுண்டம்பட்டி புதுரைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார். இவர் தனது காரில் திருச்சிலிருந்து மோகனூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.இந்த காரில் 7 வயதான வைணஷ்வி,8 வயதான திவ்யஸ்ரீ, 52 வயதான சரண்யா 7 வயதான விசாஸ்ரீ உள்ளிட்ட ஐந்து போர் இருந்துள்ளனர்.இந்நிலையில் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள சிலையத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த ஒன்பது பேர் காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்னனர்.