Skip to content
Home » திருச்சியில் மருத்துவமனை கழிவறைக்குள் சடலமாக கிடந்த கார் டிரைவர் …

திருச்சியில் மருத்துவமனை கழிவறைக்குள் சடலமாக கிடந்த கார் டிரைவர் …

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் குமாரமங்கலம் கிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் குமாரவேல் (55). கார் டிரைவர். இவர் திருச்சி தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியில் உள்ள நரம்பியல் மையம் ஆஸ்பத்திரிக்கு நோயாளி ஒருவரை அழைத்து வந்தார். நோயாளி டாக்டரை பார்க்க மருத்துவமனைக்குள் சென்று விட்டார்.கார் டிரைவர் குமரவேல் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு, கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் டிரைவர் குமாரவேல் வரவில்லை. நோயாளி டாக்டரை பார்த்து விட்டு,டிரைவரை தேடினார்.கார் மட்டும் அங்கு இருந்தது . அவரை காணவில்லை. உடனே மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர் டிரைவரின் செல்போனுக்கு போன் அடித்தார். டிரைவர் போனை எடுக்கவில்லை. அப்போது கழிவறைக்குள் இருந்து செல்போன் ஒலி ஒலித்தது. உடனே மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது கழிவறையில் இருந்தவாறு குமாரவேல் சடலமாக கிடந்தார். உடனே தில்லை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தில்லைநகர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரவேலின் மனைவி பரிமளா இந்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!