புதிய தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுனருமாகிய பிரதீப்பின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் திருச்சி கண்டோன் மெண்ட்
போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர்கள் திரண்டு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது தொடர்ந்து அங்கிருந்து ஆட்டோ டிரைவர்கள் அலைந்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.