திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர்
2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பணம் வைத்து சூதாடிய அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியைசேர்ந்த சாதிக் பாட்ஷா (வயது 45) ஜெகநாதன் ( 63 ), இப்ராம்சா (52 )சோமசுந்தரம் ( 55 ). முகமது ஜாகிர் உசேன் (35) முஸ்தபா (32 )பாலு (58) ஆகிய 7 பேரை கைது செய்தனர் .மேலும் அவர்கள் வசம் இருந்து இரண்டு பாக்கெட் சீட்டு கட்டுகள் மற்றும் ரூபாய் 3600 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.