Skip to content
Home » பைக் சாகசம்…. வழக்கில் சிக்கிய திருச்சி வாலிபர் விழிப்புணர்வு வீடியோ

பைக் சாகசம்…. வழக்கில் சிக்கிய திருச்சி வாலிபர் விழிப்புணர்வு வீடியோ

  • by Senthil

சினிமாவில் வரும் ஹிரோவை போன்று வேகமாக வீலிங் செய்தபடி திருச்சி காவேரி பாலம் மற்றும் தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட இடங்களில் வலம் வந்ததோடு மட்டுமல்லாது அதனை விதவிதமான பேக்ரவுண்ட் மியூசிக்கை போட்டு இன்ஸ்டாவில் வெளியிட்டதால் கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாநகரில் இந்த வீடியோக்கள் பேசும் பொருளாக மாறியது.

பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது என்று கடந்து செல்பவர்கள் இருந்தாலும் இது போன்ற செயல்களை காவல்துறையினர் வேடிக்கை பார்க்க கூடாது என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகளின் கோரிக்கையாக இருந்தது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களாக ரேசிங் செய்யும் பைக்கில் பயனிப்பவர்களை திருச்சி மாநகர் முழுவதும் கண்காணித்து வந்தது காவல்துறை.

அதேநேரம் இன்ஸ்டவில் வீடியோவை பதிவிட்ட இளைஞரை கைது செய்த காவல்துறையினர் அவரின் வாயிலாகவே வீலிங் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் – இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவரை வைத்தே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்குரியதாக உள்ளது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை தாண்டி இவ்வளவு விலை உயர்ந்த பைக்கை – உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருளை நமது பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டுமா என்பது குறித்து பெற்றோர்களும் கூடுதல் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதை அனைவரும் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!