திருச்சி, காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அமராவதியின் கழுத்தில் கிடந்த ஐந்தே முக்கால் சவரன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தலைமறைவாகி ஆ விட்டனர் .இதுகுறித்து அமராவதி கோட்டை குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…
- by Authour
