திருச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் , கலந்து கொண்டு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் வழங்கப்பட்டது. இத்துடன் சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, மேலும், கற்பித்தல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், மாணவர்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சியினை குறிக்கோளோடு செயல்பட்ட 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஸ் …. தமிழக முதல்வர் துறையின் பெயரில் முதல் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும், மற்றும் சிறந்த முறையில் செயலாற்றி வரும் பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழ்நாடு மாநில பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வை எழுத வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்தார்.