திருச்சி, கருமண்டபம் சக்தி நகர்9 வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன்( 60 ) காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா மகன் சுரேஷ் குமார்(26)
இவர்கள் 3பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷ்குமார் படுத்திருந்த படுக்கை அறை பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
உடனே திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் பார்த்தபோது அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன், சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தீபாவளி பண்டிகை முன் விரோதத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட மோதலில் சோலை பாண்டியனின் மனைவி மல்லிகாவின் சகோதரர் கோபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் இலங்கை வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.