சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் இந்தியா முழுவதும் தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜக முடிவு செய்திருந்தது. அதன்படி திருச்சியில் இன்று பாஜக மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில் பேரணி நடந்தது. பேரணி கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபிக்கு வந்து மீண்டும் கட்சி அலுவலகம் சென்றனது.இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் பாஜகவினர் பேரணி நடத்தினர். அனுமதி இன்றி பேரணி நடத்திய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் வந்தனர். அதற்குள் முக்கிய நிர்வாகிகள் சென்று விட்டனர்.