திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தமிழகத்தில் மக்களின் உயிரை குடிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் அரசு மதுபான கடையில் மது குடித்த இருவர் உயிரிழந்தனார். இதனைத் தொடர்ந்து தச்சங்குறிச்சி அரசு மதுபான கடையை ஆய்வு செய்ய சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம், லால்குடி சட்ட மன்ற தொகுதி சார்பாக தமிழகத்தில் மக்களின்
உயிரை குடிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் .ராஜேந்திரன்,மாவட்ட பார்வையாளர் லோகிதாசன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொதுச்செயலாளர் அன்பில் சபரி கண்டன ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில்
அன்பில் கார்த்திகேயன் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் மனோ.விக்னேஷ் மாவட்ட தலைவர் ராஜ்குமார் ஆன்மீக பிரிவு
மாவட்ட தலைவர் (விளையாட்டு பிரிவு) சசிக்குமார் விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி கொண்டான் மண்டல துணை பொதுச்செயலாளர் நம்பிராஜன் பட்டியல் இன அணி ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து லால்குடி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.