Skip to content

திருச்சியில் பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்… பாா்வையாளா்கள் அதிர்ச்சி!..

  • by Authour

 

13 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா மிகவும் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த பறவைகள் பூங்கா சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 சதுர அடி பகுதியை உள்ளடக்கியதாகவும், 30 அடி உயரமான பிரம்மாண்டமான கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு மக்களும், குழந்தைகளும் வருகை தரக்கூடிய முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் பூங்காவில் செயற்கை அருவிகள், குளங்கள் மற்றும் பல புதிய அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பறவைகள் பூங்கா சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 சதுர அடி பகுதியை உள்ளடக்கியதாகவும், 30 அடி உயரமான பிரம்மாண்டமான கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு மக்களும், குழந்தைகளும் வருகை தரக்கூடிய முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் பூங்காவில் செயற்கை அருவிகள், குளங்கள் மற்றும் பல புதிய அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. பூங்காவினுள் செல்லும் இவா்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளிக்கலாம்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த பறவைகள் பூங்காவில் ஒரு மினி தியேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பறவைகள் தொடர்பான திரைப்படங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் சார்ந்த குறும்படங்களும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு வருவோருக்கான அடிப்படை வசதிகளான உணவகம், வாகன நிறுத்தும் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூங்காவினுள் இருக்கும் சாதாரண சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சீசா போன்றவற்றில் விளையாட கட்டணமில்லை. ஆனால் சாப்ட் பிளே, ஏா் ஹாக்கி, பேஸ்கெட் பால், ப்ரூட் நிஞ்ஜா, பீட் சபேட், ரோலா் கோஸ்டா், ஃபிஷ் ஸ்பா, ரோபோட் மெசஜ் சோ், 7 டி திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ஒரு டோக்கன் ரூ. 60-க்கு தனித்தனியாக வாங்க வேண்டும். இதில் சில விளையாட்டுகளுக்கு 2 டோக்கன்கள் வாங்க வேண்டும்.

தனியே கட்டணம் செலுத்தி நொறுக்குத் தீனிகள், டீ, காபி உள்ளிட்டவை வாங்கி உண்ணலாம் என பறவைகள் பூங்காவை பராமரிக்கும் தனியாா் ஒப்பந்த நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா்.

சாதாரண திரைப்படத்துக்குச் சென்றால் ரூ. 120-க்குள் 3 மணி நேரம் மகிழ்ச்சியாக செலவிட்டு விட்டுத் திரும்பலாம் என்ற நிலையில், பெரிதாக ஒன்றும் இல்லாத பறவைகள் பூங்காவுக்குச் செல்ல நபருக்கு ரூ. 200 என்பது மிக அதிகம். இதனால் சாதாரண நடுத்தர குடும்பத்தினருக்கு பறவைகள் பூங்கா என்பது மற்றொரு எட்டாக்கனியான விஷயமாகும்.

அனைவரும் பறவைகளின் சிறப்பை உணா்ந்து, பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பறவைகள் பூங்காவுக்கு சாதாரண மக்கள் நுழைய முடியாமல் அதிகக் கட்டணம் வசூலிப்பது என்பது நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது

60 கார்கள் மற்றும் 100 இருசக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்கா, கம்பரசம்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்து இருப்பதால் மக்கள் வந்து செல்ல எளிதாக இருக்கும்.

இந்த பூங்காவில் நுழைய பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காவானது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 5 மணியுடன் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும்.

திருச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட பறவைகள் பூங்காவில் அதிக நுழைவுக் கட்டணத்தால் பாா்வையாளா்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா். கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். இது குறித்து பூங்காவை நிா்வகிக்கும் ஒப்பந்த நிறுவன ஊழியா்களிடம் கேட்டபோது, கட்டண குறைப்பு தொடா்பாக மேலிடத்தில் தெரிவித்துள்ளோம். உரிய பதில் கிடைத்ததும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

error: Content is protected !!