திருச்சி திருவானைக்கோவில் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சித்தார்த் (34). இவர் ஏப் 14ம் தேதி தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் ஏப்.15ம் தேதி வந்து பார்த்தபோது பைக் திருட்டுபோனது தெரிந்தது. இது குறித்து புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து லால்குடி, சிறுதையூரைச் சேர்ந்த ஸ்ரீராம் (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர், இவருடன் இருந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய பொன்மலைப்பட்டி, மலையடிவாரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
