திருச்சி திருவெறும்பூரில் உள்ளது பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல். இங்கு சுமார் 7 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். உயர் ரக கொதிகலன்கள் மற்றும் மின் உற்பத்திக்கான சாதனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.இங்கு பெல் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு குடியிருப்பும் உள்ளது.
பெல் நிறுவனத்தின் எஸ் எஸ் டி பி பிரிவில் பொது மேலாளராக பணியாற்றியவர் சண்முகம்(50), இவர் வழக்கம் போல நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். மாலை 4.30 மணிக்கு பணி முடிந்த பின்னரும் இவர் வீடு திரும்பவில்லை. இவரது வீடு பெல் கணேசபுரம் 8வது தெருவில் உள்ளது.
சண்முகம் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் போன் செய்து உள்ளனர். ஆனால் சண்முகம் போனை எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து பெல் நிறுவன அலுவலகத்திற்கு மனைவி பார்வதி தொடர்பு கொண்டுள்ளனர். அலுவலக ஊழியர்கள் சென்று
சண்முகம் பணியாற்றும் கேபினை பார்த்து உள்ளனர். அங்கு கதவு அடைக்கப்பட்டு இருந்தது.இதை அங்கு இருந்த ஊழியர்கள் சண்முகத்தின் மனைவி பார்வதிக்கு தெரிவித்து விட்டனர். அவரும், கணவர் வேறு எங்கோ போய் இருப்பார் என கருதிக்கொண்டார்.
நள்ளிரவிலும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே மனைவி பார்வதி மீண்டும் சண்முகத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த தகவல் சென்றது. சண்முகத்தின் கேபின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்தனர்.அப்போது அதிகாலை 1.30 மணி ஆகி விட்டது.
அங்கு சண்முகம், துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. நெற்றிப்பொட்டில் சுட்டு உள்ளார். சோபாவில் அமர்ந்த நிலையில் அவர் தற்கொலை செய்து உள்ளோர். அந்த பகுதி முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேதே பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துமெல் போலீசார் விசாரணை நடத்தியது சண்முகத்திற்கு பார்வதி என்றும் மனைவியும் அவர் பெல் வளாகத்தில் உள்ள பெல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்றும் அவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். சண்முகத்திற்கு இதய நோய் பிரச்சனை இருந்து வருவதும் அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது .
சண்முகத்தின் அருகில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை என்பதும் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த துப்பாக்கி சண்முகத்திற்கு எப்படி கிடைத்தது. அவர் எங்கிருந்து வாங்கினார் என பெல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெல் உயர் அதிகாரி ஒருவர் திருட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது பெல் நிர்வாகத்திற்கும் , ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சண்முகம் எப்போது தற்கொலை செய்தார், ஏன் தற்கொலை செய்தார். அவர் தற்கொலை தான் செய்தாரா,? குடும்பத்தில் அல்லது அலுவலகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.