தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன் இன்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
முசிறி மேட்டு வாய்க்கால் கடைமடைக்கு மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டு 50 நாட்களுக்கு பிறகு தான் தண்ணீர் வந்துள்ளது. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 50 நாள் ஆன பிறகும் வாய்க்காலில் இருந்து நிலத்திற்கு கண்ணீர் பாயும் அளவிற்கு ஆமூருக்கு கிழக்கே வாத்தலைக்கு கூட தண்ணீர் வரவில்லை.
நெ.1 டோல்கேட்டில் அய்யன் வாய்க்கால் இருந்து பிரியும் கருப்பட்டி வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதை போல் இன்னும் 25 வாய்க்கால்களின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததற்கு காரணமே லஸ்கர்கள் இல்லாததும் வாய்க்காலில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றாததும், தான்
பலமுறை அய்யாற்றில் இருந்து ஆலத்துடையான்பட்டி ஏரிக்கு வரும் வாய்க்கால் 60அடி அகலத்தில் உள்ள
வாய்க்காலை 6 அடியாக குறைத்த ஆக்கிரமிப்பை அகற்ற அரசு அதிகாரி முன் வர மறுப்பது தான்.
சாக்கடை கழிவுகள், மலத்தை குப்பைகளை விவசாய வாய்க்காலில் கொட்டி வாய்க்காலை அழிப்பதுடன் விவசாயிகள் மலத்தை கையில் அள்ளும் நிலையை வருவாய், மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுக் கொள்ளதை கண்டித்து உங்களுக்கு ஏன் அலுவலகம் வேண்டும் என்று கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் இன்று விவிசாய சங்கத்தலைவர் அய்யக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.