Skip to content
Home » திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார்.லால்குடி நகராட்சியில் தமிழக அரசு உத்தரவுபடியும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுரையுன் பேரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி சந்தைப் பேட்டை வாரச்சந்தையில் தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு லால்குடி நகர மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் ஆணையர் குமார், துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் முன்னிலையில் சௌந்தரபாண்டியன் எம் எல் ஏ பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் வெங்கட்ராமன், ஓவர்சியர் பிரசாந்த், நகர மன்ற உறுப்பினர்கள் சங்கர், ராதிகா முருகன், விஜயலட்சுமி ராஜேந்திரன், செந்தில் மணி, சாரதா, மதியழகன் நகராட்சி நகராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், லயன் கிளப் நிர்வாகிகள் , மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன்

கோஷமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.பேரணி வாரச்சந்தை தொடங்கி ரவுண்டானா வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விட்டின் பகுதியில் குப்பைகளை சேகரித்து பராமரித்து வந்த திருமாவளவன், ஸ்கை பவுன்டேசன் நிறுவனர் முத்தமிழ் செல்வன் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாவித்திரி, வனிதா, சங்கீதா ,மாரிமுத்து ஆகியோருக்கு சௌந்தரபாண்டியன் எம் எல் ஏ பாராட்டு சான்றிதழ் வழங்கியும் மேலும் கருப்பன் குளம் பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர்.துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, களப்பணி உதவியாளர் தமிழ் மொழி விழிப்புணர்வுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!