திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் திரண்டனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது… திருச்சி அனைத்து ஆட்டோ டிரைவர்கள் சேர்ந்து மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.16-ம் என நிர்ணயித்துள்ளோம். பொதுமக்களுக்கு சேவை மீட்டருக்கும் ரூ.16-ம என நிரணயித்துள்ளோம். பொதுமக்களுக்கு சேவை ஆட்டோ டிரைவர்கள் வைத்து இருக்கக்கூடிய வாட்ஸ்அப் மூலம் செல்போன் எண்ணை பகிர்ந்து, எந்த கமிஷனும் இல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறோம். ஆனால் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக அனைத்து ஆட்டோ டிரைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கார்ப்பரேட் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.