திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ டிரைவர். இவர் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அதன் பிறகு வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கினார்.அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ ( 19),குபேந்திரன் என்கிற நிபுயா (19), மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
வீட்டிலிருந்த காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து கொண்டனர். இவர்கள் மூவரும் உள்ளே சென்று குணசேகரனின் உடலில் குபேந்திரன் காலியாக உள்ள ஊசியை ஏற்றினார். விஜயகுமாரும் லித்தினியா ஸ்ரீயும், விஜயகுமாரும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெரித்துள்ளனர்.காமாட்சியும் சுலோச்சனாவும் வெளியில் இருந்து காவல் காத்துள்ளனர்.பின்னர் அவர்கள் தூக்கில் தொங்கியவாறு குணசேகரனை தொங்கவிட்டு நாடகம் ஆடியுள்ளனர்.
இது குறித்து காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கோட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பிரேத பரிசோதனையின் இது தற்கொலை அல்ல கொலை என்பது தெரிய வந்துள்ளது இதன் பேரில் கோட்டை போலீசார் காமாட்சி, சுலோச்சனா, விக்கி, குபேந்திரன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது தொடர்பாக விக்கி , குபேந்திரன் , மனைவி சுலோச்சனா உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.