திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற இளமாறன் (39) என்பவர் தகாத வார்த்தைகளால் சங்கரை திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சங்கர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுக்குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து அப்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது
- by Authour
