திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்,கிராம முன்னேற்ற குழு கூட்டம் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் ,தமிழ் மண்வளம் செயலி பயன்படுத்துதல் ,மண் மாதிரி சேகரிப்பு அவசியம் மற்றும் மண் மாதிரி அடிப்படையில் உர நிர்வாகம் அளித்தல்,தரிசு நிலம் மேம்பாடு திட்டம் பற்றியும், நெல் சாகுபடியில் நுண்ணூட்டஉரத்தை பயன்படுத்துதல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கி கூறி விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலுரை அளித்தார்.இதில் குமுளூர் வேளாண்மை கல்வி நிலையத்தின் டாக்டர்.திருமதி.சிவரஞ்சனி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம்,முக்கிய சாகுபடி தொழில்நுட்பம் பற்றியும், மண்மாதிரி எடுத்தல்,மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகர் விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் பற்றியும்,சம்பா நெல் விதை தேர்வு, உயிர் உரங்கள் பயன்படுத்துதல், சணப்பை,தக்கைபூண்டு விதைத்தல் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சபரிச் செல்வன் அட்மா திட்டசெயல்பாடுகள் ,விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் பற்றி விளக்கி கூறினார் .கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் உழவன் செயலி பயன்பாடுகள் விளக்கி கூறி உழவன் செயலி பதிவிறக்கம் செய்து கொடுத்தார். இப் பயிற்சியில் கூ கூர் கிராமத்தை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்,உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பல முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர் .
திருச்சி அருகே அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி..
- by Authour