திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு. உமா வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (3ம் தேதி) காலை 4.30 am – 5.30 am வரை திருச்சி தென்னுர் Science park ல் ( உக்கிர காளியம்மன் கோவில் எதிரில் ) கோள்கள் அணிவகுப்பு நிகழ்வை தொலைநோக்கி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் மேற்கொண்டுள்ளது. கோள்கள் அணிவகுப்பை தொலைநோக்கி மூலம் பார்க்க அனுமதி இலவசம். இந்த அறிவியல் நிகழ்வை மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெறலாம்.