திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது37 ) இவர் நேற்று திருவரங்கம் பூ மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஸ்ரீரங்கம் கீழ அடைய வளைஞ்சான் தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி செட்டி ( வயது43) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.