திருச்சி குழுமணி ரோடு காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக துபேல்ராஜா என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம், பாலக்கரை பகுதிகளில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ரமேஷ், மீரான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.